மும்பை: இம்மாதம் 16ஆம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
சைஃப் அலிகான் பிடிக்க முயன்றபோது அவரை அந்நபர் கத்தித்தகடால் (blade) பலமுறைக் குத்திவிட்டுத் தப்பியோடினார். சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.
இதனால் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) வீடு திரும்பினார். கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு சைஃப் அலிகானை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருவத்துவமனையில் அனுமதித்தார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பணம் ஏதும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைஃப் அலிகான், பஜன் சிங் ராணா என்ற அந்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.