இயக்குநர் அட்லீ இந்தியில் படம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அவரது தயாரிப்பில் ‘பேபி ஜான்’ என்ற படம் உருவாகிறது.
தமிழில் வெளியான ‘தெறி’ படத்தின் இந்தி மறுபதிப்புதான் ‘பேபி ஜான்’.
‘தெறி’ படத்தில் நடிகர் பிரபு காவல்துறை அதிகாரியாக கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதற்கு இந்தியில் யார் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தபோது அட்லீக்கு சல்மான் கான் நினைவு வந்ததாம்.
இதையடுத்து, சல்மானுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களைச் செய்து அவரை அணுக, அவருக்கும் கதை பிடித்துப்போனது. அட்லீ எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் சல்மான்.
இப்படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லனாக மிரட்ட உள்ளதாகத் தகவல்.