கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்து நின்றாலும், தனது கடந்த கால எளிய நினைவுகளை எப்போதுமே மறக்காதவர் நடிகை சமந்தா.
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தனது சிறு வயது தீபாவளி நினைவுகளைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தீபாவளி பண்டிகை என்றாலே தனது நினைவிற்கு வரும் பிடித்தமான பலகாரம் அதிரசம் என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா. அப்போது வீட்டுக்கு அருகே இருந்த கடையில் விற்கப்படும் அதிரசத்தை வாங்கி ருசிப்பதற்காக, ஒரு ரூபாயைச் சேமித்து வைப்பாராம். அந்தப் பொன்னான சிறு வயது நாள்களை மறக்கவே இயலாது என்கிறார்.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அமைந்த அந்த சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலவிதமான பண்டிகைக் கால பலகாரங்களைத் தயாரித்து அசத்தினர்.
குறிப்பாக, சமந்தாவுக்கு மிகவும் பிடித்தமான பாரம்பரிய உணவுகளைச் சமையல் கலைஞர்கள் சமைத்து வழங்கியது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.
