அடுத்தடுத்து நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் சசிகுமார்.
அவரது நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள ‘மை லார்ட்’ படத்தை ’ஜோக்கர்’, ’குப்பு’, ’ஜப்பான்’ போன்ற படங்களை இயக்கிய ராஜ்முருகன் இயக்கியுள்ளார்.
கன்னட நடிகை சைத்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு, ஷான் ஹோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’எசகாத்தா’, ‘ராசாதி ராசா’ ஆகிய பாடல்கள் எற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு ஜனவரி 19ஆம் தேதி வெளியானது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திவரும் சிறுநீரக மோசடியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவமும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ’மை லார்ட்’ படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

