தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பிய சத்யராஜ்

1 mins read
88b7e5a6-a581-41f3-904a-ea78dc670130
சத்யராஜ். - படம்: ஊடகம்

சத்யராஜ் நடிக்கும் புதுப் படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் காளி வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ரோஷிணி, ஹரிப்ரியன், மதுமிதா, கீதா கைலாசம், பானுப்ரியா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தில், அறிவியல் சார்ந்த புனைக் கதைகள் எழுதும் எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார் சத்யராஜ்.

“குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து போரடித்துவிட்டது என்பதால் மீண்டும் வில்லனாக விரும்புகிறேன்,” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் ஒருமுறை சொல்லியிருந்தார் சத்யராஜ்.

அதை நினைவில் வைத்திருந்து தாம் இயக்கிய ‘சிக்கந்தர்’ இந்திப் படத்தில் சத்யராஜை மீண்டும் வில்லனாக்கினார் முருகதாஸ்.

ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால், மீண்டும் தனது பாதையை மாற்றிக்கொண்டு விட்டாராம் சத்யராஜ்.

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் அவர்தான் கதை நாயகன்.

குறிப்புச் சொற்கள்