விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான ‘96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் பாகம் முழுக்க முழுக்க காதல் படமாக உருவானது எனில், இரண்டாம் பாகத்தில் காதல் அறவே இருக்காதாம்.
“குடும்பப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து கதைக்களத்தை உருவாக்கி உள்ளோம். அதேசமயம் இரண்டாம் பாகம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்று படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தரப்பில் கூறப்படுகிறது.
இரண்டாம் பாகத்தை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும்தான் படமாக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.