சின்னத்திரை மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள பாலா, தற்போது திரையுலகிலும் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃபின் அடுத்த படத்தில் பாலாதான் நாயகனாம்.
இந்தத் தகவலை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலாவைத் தாமே ஒரு படத்தைத் தயாரித்து, அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், நல்ல தயாரிப்பாளரும் கதையும் அமைந்ததால் பாலாவின் முதல் படம் விரைவில் உருவாக உள்ளதாக லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஏழ்மையில் உள்ளவர்களின் வீடு தேடிச் சென்று பல்வேறு வகையிலும் உதவி வருகிறார் பாலா.
தற்போது ராகவா லாரன்ஸ் போன்றவர்களுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தி உள்ளார்.
பாலா நாயகனாக நடிக்கும் படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிக்கிறார்.

