தொலைக்காட்சி நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் சிவா

தொலைக்காட்சி நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் சிவா

படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

19 Feb 2026 - 3:51 pm

1 mins read

தொலைக்காட்சியில் பணியாற்றியபோது தன்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் படங்கள் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படங்களின் வெற்றி, தோல்வி குறித்து தாம் கவலைப்படுவதில்லை என்றும் நண்பர்கள் நல்ல இடத்தைப் பிடித்தால் அதுவே போதும் என்றும் கூறுகிறார் சிவா.

அந்த வகையில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையுலகில் அறிமுகமாகி இளையர்களின் கவனம் ஈர்த்துள்ள ரியோ ராஜ் நடிக்கும் அடுத்த படத்தை சிவாதான் தயாரிக்கிறார்.

ரியோ ராஜின் அறிமுகப் படமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

சிவா தயாரிப்பில் ரியோ நடிக்கும் புதுப்படத்தை இயக்குபவர் வேறு யாருமல்ல. சிவகார்த்திகேயன் மனைவியின் தங்கை கணவர் கார்த்திகேயன்.

இவர் ‘ஹிப்ஹாப்’ ஆதி, லோகேஷ் கனகராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். எனினும், உறவினர் என்பதால் மட்டுமே கார்த்திகேயனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு திறமை வாய்ந்த இயக்குநருக்கான அனைத்து திறமைகளும் உள்ளவர் என்பதால்தான் இந்த வாய்ப்பை சிவா வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிவகார்த்திகேயன்நடிகர்தொலைக்காட்சிதயாரிப்புதிரைப்படம்இயக்குநர்