‘ஹிருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
மோகன்லாலுக்கும் மாளவிகாவுக்கும் 33 வயது வித்தியாசம். இதையறிந்த ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் எரிச்சலடைந்த மாளவிகா மோகனன், அண்மைய பதிவு ஒன்றில் தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
“முதலில் இப்படிப் பேசுவதை நிறுத்துங்கள். நடிகைகளிடம் வயது வித்தியாசம் குறித்தெல்லாம் பேசக்கூடாது. திரையுலகில் திறமை குறித்து மட்டுமே பேச வேண்டும்.
“மற்ற அனைத்துமே அர்த்தமற்ற விஷயங்கள்தான். அவற்றைப் பற்றி பேசுவதால் எந்தப் பலனும் இல்லை,” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.
இவர் தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார்-2’, தெலுங்கில் பிரபாசுடன் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.