அன்பு, இரக்கம் காட்டுவது பலவீனமல்ல; அதைத்தான் நான் நம்புகிறேன்: ராஷ்மிகா

அன்பு, இரக்கம் காட்டுவது பலவீனமல்ல; அதைத்தான் நான் நம்புகிறேன்: ராஷ்மிகா

1 of 2
படம்: இடிவி பாரத்
படம்: இடிவி பாரத்

23 Oct 2026 - 5:47 pm

2 mins read

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘ரணபலி’ திரைப்படம் கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் குறித்துப் பேசிய ராஷ்மிகா மந்தனா, “அன்பையும் இரக்கத்தையும் காட்டுவது பலவீனமல்ல; அதைத்தான் நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

மேலும், “நம்மைச் சுற்றி பேரளவில் எதிர்மறை எண்ணங்கள் பரவிக் கிடக்கும் சூழலில், என்னால் முடிந்தவரை நேர்மறை எண்ணங்களைப் பரப்ப விரும்புகிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய இந்த இயல்பான குணத்தைக்கூட ‘ஓவர் ஆக்டிங்’ என்று ஒரு சிலர் சொன்னாலும் பரவாயில்லை.

“உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. எனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

“மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்னால் நடிக்க முடியாது; இந்த இயல்புதான் என்னையும் என் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது,” என்று பகிர்ந்துகொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விஜய் தேவரகொண்டா, “இன்றைய சூழலில் நடிகர்கள் மீது செய்யப்படுகிற ‘ட்ரோல்’கள் பெரும்பாலானவை திட்டமிட்டு உருவாக்கப்படுபவை,” என்றார்.

அத்துடன், “சமூக வலைத்தளங்களில் சில கணக்குகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நபர் மீது தவறான பிம்பத்தை உருவாக்கப் பெரிய குழுவே பின்னணியில் வேலை செய்கிறது.

“எனவே, இதுபோன்ற திட்டமிட்டு உருவாக்கப்படும் கருத்துகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடித்துள்ள படம் இதுதான்.

திருமணம் பற்றியும் ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.

“நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஓர் ஆண்டுக்கு மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சம்மதம் சொல்வதற்காக நான் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்று மனம் திறந்து பேசினார்.

குறிப்புச் சொற்கள்
ராஷ்மிகாநடிகைஅன்புதிருமணம்திரைப்படம்