தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திப் படத்தில் இருந்து விலகிய ஷ்ருதி ஹாசன்

1 mins read
778c64db-abe7-405f-97bb-336e698e3f82
ஷ்ருதி ஹாசன். - படம்: ஊடகம்

கதாநாயகனின் தலையீடு காரணமாக ‘டகாய்ட்’ என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகை ஷ்ருதிஹாசன் விலகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கியுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ஷ்ருதிஹாசன். மேலும், ‘டகாய்ட்’ படத்திலும் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாகப் படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ருதி, திடீரென அதிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் கதாநாயகன் ஆத்வி படத்தின் பல பணிகளிலும் தலையிட்டாராம். ஒரு கட்டத்தில் ஷ்ருதியின் உடைகள், கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவற்றிலும் அவர் தலையிடவே, அன்றைய தினமே தான் விலகிக்கொள்வதாகக் கூறி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டாராம் ஷ்ருதி.

தற்போது அவருக்குப் பதிலாக மிருணாள் தாக்கூர் இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்