புதுப்புது அவதாரங்கள் எடுக்கும் பாடகி கல்பனா ராகவேந்தர்

1 mins read
50d1ccc0-6eaa-43bc-bc92-150fb18cc288
பாடகி கல்பனா ராகவேந்தர். - படம்: ஊடகம்

தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் நடுவராக பொறுப்பு வகித்த பின்னர் பாடகி கல்பனா ராகவேந்தருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. தற்போது, நடிப்பு, தயாரிப்பு எனப் புது அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மரணமடைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த படம் ‘ஆர்பிஎம்’. இதைத் தயாரித்தவர் கல்பனா தானாம். மேலும், அதில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.

வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் அருமையாக நடித்துப் பெயர் பெற்ற டேனியல் பாலாஜி, இப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.

“நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டுப் பாடுவதில்தான் கவனம் செலுத்தி வந்தேன். நடிப்பு என்பது திடீர் எனத் தோன்றியது,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கல்பனா.

குறிப்புச் சொற்கள்