பெண்களை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் குறைவான காலம் மலையேறிவிட்டது.
அண்மை ஆண்டுகளாக கதாநாயகிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் அதிகம் வெளியாகின்றன.
அந்த வரிசையில் நவம்பர் 6ஆம் தேதி சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகிறது.
நயன்தாரா நடிப்பிலேயே ஆக்ஷன் படமாக தயாராகிவரும்‘ராக்காயி’ டிசம்பரில் திரைக்கு வருகிறது.
ராஷ்மிகா மந்தனாவின் ’மைசா’ திரைப்படம் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி அந்தப் படம் திரையங்குகளில் வெளியாகிறது.
பிரபல லாவணி நடனக் கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘ஈதா’ திரைப்படமும் திரிப்தி டிம்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கமல் அவுர் மீனா’ திரைப்படமும் டிசம்பரில் வெளியாகின்றன.
ஆக்ஷன், காதல், திகில் கலந்த கதையுடன் அனீத் பத்தா நடிப்பில் தயாராகியுள்ள ’சக்தி ஷாலினி’ படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆக, அடுத்த இரண்டு மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட ஆறு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.
