ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக உடலை வருத்திக்கொண்டு ‘சிக்ஸ் பேக்ஸ்’ உடற்கட்டை உருவாக்க நினைப்பது ஆபத்தானது என்கிறார் நடிகர் பரத்.
ஒரு காலத்தில் வெற்றி நாயகனாக வலம்வந்த இவருக்குத் தற்போது சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில், ‘ஐந்து ஐந்து ஐந்து’ என்ற படத்தில் நடித்தபோது, அவரது கதாபாத்திரத்துக்காக ‘சிக்ஸ் பேக்ஸ்’ உடற்கட்டு தேவைப்பட்டதாம். இதற்காகத் தாம் மேற்கொண்ட சிரமங்கள் குறித்து ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.
“ஏதோ சாதாரண உடற்பயிற்சி செய்தாலே அந்த உடற்கட்டைப் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறானது. அது மட்டுமன்று. இந்த ‘சிக்ஸ் பேக்ஸ்’ உடற்கட்டுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளால் உடல் கடுமையாகப் பாதிக்கப்படும்.
“நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கோழிக்கறி, முட்டை, உலர் திராட்சை, பிஸ்கட் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டேன். இதனால் பலவிதமாகச் சிரமப்பட்டேன்.
“எனவே, தேவையின்றி யாரும் ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற விபரீத முயற்சியில் ஈடுபட வேண்டாம்,” என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் பரத்.

