தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் சின்னத்திரை: திட்டவட்டமாக மறுக்கும் ரோஷினி

1 mins read
bc2d28d0-9e3a-4508-813e-c7842cc1e0dc
ரோஷினி ஹரிப்பிரியன். - படம்: ஊடகம்

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன், சினிமா ஆசையில் அங்கிருந்து வெளியேறினார்.

தொடக்கத்தில் திரையுலகம் இவருக்குப் பெரிய வரவேற்பைத் தரவில்லை.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் ‘கருடன்’ வாய்ப்பு அமைந்தது. தற்போது மேலும் சில படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

இந்நிலையில், இவர் மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்க உள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. ஆனால், ரோஷினி இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நடிகை கௌதமியைப் போல், இவரும் சினிமாவில் இருந்து விலகி, சின்னத்திரையில் தோன்றுவார் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்கிறார்.

இதற்கிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஜீ’ தொலைக்காட்சியில் ஒளியேறும் தமிழ்த் தொடர் ஒன்றில் நடிக்கிறாராம் கௌதமி.

குறிப்புச் சொற்கள்