தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்‌ஷி சின்ஹா

1 mins read
8f26aa43-a4fe-4b32-8eb8-2afc5206fbf6
சோனாக்‌ஷி சின்ஹா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை நினைவிருக்கிறதா?

முன்னணி நடிகையாக இந்தித் திரையுலகில் வலம் வருபவர் சோனாக்‌ஷி.

2010ஆம் ஆண்டு வெளியான ‘தபாங்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் ‘ஜடதாரா’. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில், கதாநாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டொரு நாள்களில் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்