‘பராசக்தி’ படத்தையடுத்து தனுஷின் 55வது படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் ஸ்ரீலீலா.
தற்போது தனுஷின் 54வது படமாக ‘கர’ உருவாகியுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகப் பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதை அறிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியான ‘பராசக்தி’ படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ஸ்ரீலீலா நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பலரும் பாராட்டினர். இதையடுத்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் 64வது படத்திலும் ஸ்ரீலீலாதான் கதாநாயகி எனக் கூறப்படுகிறது.

