தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படக்குழுவினருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் ஸ்ரீ லீலா

1 mins read
44042c64-5baf-49cc-8947-f3eb7e66c078
ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ரீ லீலா மருத்துவம் படித்தவர் என்பது உலகமறிந்த தகவல்.

அவர் தாம் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பின்போது, படக்குழுவைச் சேர்ந்த யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனே முதலுதவி செய்கிறார்.

இதன் மூலம் தமக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகச் சொல்பவர், தாம் படித்த மருத்துவப் படிப்பு வீண்போகவில்லை என்ற உற்சாகமும் ஏற்படுவதாகக் கூறுகிறார்.

“ஒரு காலத்தில், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த மருத்துவரும் நடிகருமான ராஜசேகர், தன்னுடைய படங்களின் படப்பிடிப்பு தளத்தில் இதுபோல் சிகிச்சை அளிப்பார். இப்போது ஸ்ரீலீலாவும் அந்தச் சேவையை வழங்குகிறார். இது பாராட்டுக்குரியது,” என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது மும்பையில் தங்கியுள்ள ஸ்ரீலீலா, தனது தாயாருடன் உணவகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, ஒரு மூதாட்டி அவரை அடையாளம் கண்டுகொண்டு, வணக்கம் தெரிவித்தாராம்.

இதைக் கண்ட ஸ்ரீலீலா, உணவகத்தில் இருந்து வேகமாகப் புறப்பட்ட காரைச் சட்டென நிறுத்தி அந்த மூதாட்டிக்கு பதில் வணக்கம் கூறியுள்ளார்.

மேலும், தன் கைகளை இதயம் போன்ற வடிவில் வைத்து, அந்த மூதாட்டியைத் தானும் நேசிப்பதாகக் குறிப்பால் உணர்த்தியுள்ளார். இதற்காகவும் அவரை ரசிகர்கள் மெச்சியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்