மருத்துவ நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீலீலா

1 mins read
d8cc45e1-825b-46ed-9d94-c49f4959b9ea
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்

நன்கு படித்தவர்கள் திரையுலகத்துக்கு வருவது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, மருத்துவம் படித்த கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

சாய் பல்லவி, அதிதி சங்கர் ஆகியோர் மருத்துவம் படித்தவர்கள் என்பது ரசிகர்களுக்கு ஏற்கெனவே தெரியும். இந்தப் பட்டியலில் நடிகை ஷிவானியும் அண்மையில் இணைந்தார்.

அவர் ‘அன்பறிவு’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவும் மருத்துவப் படிப்பை முடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள ஷிவானி, தன் பெற்றோரின் விருப்பத்துக்காக மருத்துவம் படித்தாராம். மேற்குறிப்பிட்ட மற்றவர்களும்கூட தாய், தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்ததாகக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்