தெலுங்கு பேசும் ‘பராசக்தி’ ஸ்ரீலீலா

1 mins read
fa07d29c-d73d-4589-b3bf-e4e6de72b57e
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்

சுதா கொங்கரா இயக்கிவரும் ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா.

தெலுங்கில் ஏராளமான படங்கள் கைவசம் வைத்திருந்தாலும், தமிழில் அறிமுகப் படம் என்பதால் கடும் கால்ஷீட் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ‘பராசக்தி’ படத்துக்காக தேதிகளை ஒதுக்கி உள்ளாராம்.

அதனால் படக்குழுவினரும் இத்தேதிகளை வீணாக்காமல் மிகுந்த கவனத்துடன் படப்பிடிப்புக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இப்படத்தில் அவர் தெலுங்கு பேசும் பெண்ணாகவே நடிப்பதால், ஸ்ரீலீலாவுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் எளிதாக இருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்