இசையமைப்பாளருடன் நடிக்கும் சமந்தா

இசையமைப்பாளருடன் நடிக்கும் சமந்தா

1 mins read
328438e5-8a42-4d09-8eac-843a85ec377b
-

நடிகை சமந்தாவை தனது ஜோடியாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இவர் புதுமுக நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக சூர்யா நடிக்கும் 'எஸ் 3' படம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க மறுத்து, நடிப்பதற்கான பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். புதுமுக நடிகர் என்றாலும் ஏற்கெனவே பிரபலமானவர் என்பதால் சமந்தா கால்‌ஷீட் தருவார் என்று கூறப்படுகிறது.

தெலுங்குப்பட இயக்குநர் சுகுமார் தமிழ், தெலுங்கில் தேவி ஸ்ரீபிரசாத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களின் இசைப் பணியை முடித்துக் கொடுப்பதற்கான வேலையில் மும்முரம் காட்டி வருகிறாராம்.