விஜய், அஜித்தைப் பின்னுக்குத் தள்ளிய கார்த்தி

விஜய், அஜித்தைப் பின்னுக்குத் தள்ளிய கார்த்தி

1 mins read
f6f3fbee-670f-4314-a9da-cee287b0900e
Google News Preferred Icon

விஜய், அஜித் நடித்த படங்கள் அமெரிக்காவில் இரண்டிலிருந்து மூன்று கோடி வரை வசூலிக்கும். ஆனால், அங்கு வெளியாகும் ரஜினி படங்கள் பத்து கோடி வசூலிக்கும். விரைவில் வெளியாகவுள்ள ரஜினியின் 'கபாலி' படத்தின் அமெரிக்க திரையரங்கு விநியோக உரிமை மட்டும் 8.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கார்த்தியின் 'தோழா' திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பான 'ஊப்பிரி' அமெரிக்காவில் முதல் பத்து நாட்களில் 9.15 கோடிகளை வசூலித்துப் பட்டையைக் கிளப்புகிறது.

அங்கு மகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்கள்தான் இப்படி வசூலை அள்ளும் என்கிறார்கள். அதே வசூலை கார்த்தி, நாகார்ஜுனா நடித்துள்ள 'ஊப்பிரி' படமும் பெற்றுள்ளது. விஜய், அஜித்தின் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. அவை எதுவும் அங்கு ஒரு கோடியைக்கூட இதுவரை தொட்டதில்லை என்பது முக்கியமானது. எனவே, கார்த்தி முன்னணி நடிகர்களான அஜித், விஜய்யை வசூல் விஷயத்தில் முந்திவிட்டார்.