கௌதம் மேனனுக்குத் தற்போது சிரம திசைபோல. அவர் எடுக்கும் படங்கள் பாதியில் நின்று விடுகின்றனர். தனுஷ் கதாநாயகனாக நடிக்க 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சில பிரச்சினைகளால் அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடங்கிப்போயின. அதன் பிறகு பஞ்சாயத்து நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' தற்போது வெளியீடுக்குத் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இசை அமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் கௌதம் மேனன். தனுஷுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ளளார். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடும் திட்டத்தில் 'பாகுபலி' ராணாவை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கௌதம் மேனன். நோன்புப் பெருநாள் விருந்தாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
நோன்புப் பெருநாளுக்கு விருந்து
1 mins read
-

