தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவது தெரிந்த சங்கதி. இப்படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளாராம் அவர். இதற்காக தனுஷ், நடிகை கஜோல் இணைந்து நடித்துள்ள சிறப்பு பாடல் காட்சி ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளிக் காட்சியை இணையத்தளங்கள், தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மக்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனை சௌந்தர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் 'வேலையில்லா பட்டதாரி 2'
1 mins read
-

