சிங்கப்பூரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி?

சிங்கப்பூரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி?

1 mins read
601e99f2-e759-474d-8871-f2f12f93762c
படங்கள்: விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கம் -
multi-img1 of 2

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி விடுமுறைக்காக சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக ஊடகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனை மேலும் நம்பத்தகுந்த தகவலாக்கும் விதத்தில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருக்கும் 'சென்ட்ரல் பெர்க் கஃபே'யில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாக அவை இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவை எப்போது எடுக்கப்பட்டவை என்ற தகவலோ அவர்கள் சிங்கப்பூரில் இருப்பதாக அதிகாரபூர்வ தகவலோ இல்லை.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் நயன்தாராவும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் ஹைதராபாத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த ஜோடி ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட புகைப்படமும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

தமது டுவிட்டர் பதிவில் கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து அந்தப் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். 'சென்ட்ரல் பெர்க் கஃபே' கடைக்கு முன்னாலும். 'ஃபிரண்ட்ஸ் சோஃபா' என அழைக்கப்படும் இருக்கையிலும் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் பரவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்