திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
69a070d9-6e9e-4f53-ad84-6bbfa7267fc5
-
multi-img1 of 3

 'பீஸ்ட்' படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விஜய். 'ஜாலியோ ஜிம்கானா' எனத் தொடங்கும் அந்தப் பாடல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்போது படத்தின் நாயகன் விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இப்பாடலை விளம்பரப்படுத்தும் வகையில், சிறிய காணொளித்தொகுப்பை வெளியிட்டுள்ளனர். அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 நாயகியை மையமாக வைத்து உருவாகும் 'ரெஜினா' என்ற படத்தில் நடித்து வருகிறார் சுனைனா. தமிழில் வாய்ப்புகள் குறை வாக இருந்ததால் மலையாளக் கரையோரம் ஒதுங்கியவர் அங்கு சில படங்களில் தலைகாட்டினார். ஆனால், அதுதான் இந்தப் புதிய வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. ஓர் இளம் இல்லத்தரசி அசாதாரண மான விஷயங்களைச் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பல்வேறு விதமான இடையூறுகளை அவள் எதிர்கொள்ள நேரிடு கிறது. அவற்றைக் கடந்து சாதிக்க முடிந்ததா என்பதுதான் கதையாம். தமிழில் எடுக்கப்பட்டாலும், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இதனால் கிடைத்துள்ள லாபத்தால் தயாரிப்புத்தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தன்னுடன் பணியாற்றிய படக்குழுவில் இருந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா பரிசளித்துள்ளார்.

அந்த வகையில் பட நாயகி பிரியங்கா மோகனுக்கும் பூங்கொத்துடன் பரிசு ஒன்றை அனுப்பி வைக்க, அவர் பூரித்துப் போனாராம். உடனடியாக அந்தப் பரிசையும் பூங்கொத்தையும் படம்பிடித்து இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு தனது வெற்றிப் படங்களை இயக்கிய ஹரி, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்களுக்கு கார்களைப் பரிசளித்துள்ளார் சூர்யா.

 பரத் தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆர்.பி.பாலா இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். கதைப்படி பரத் ஒரு சைக்கோவைப் போல் நடந்து கொள்வாராம். வாணி அவரது மனைவி. இந்தக் கதாபாத்திரத்துக்காக பரத் தோற்றத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது உடல்மொழி வித்தியாசமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

 மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான திரைப்படம் 'லூசிஃபர்'. இதன் தெலுங்கு மறுபதிப்பில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். 'காட் ஃபாதர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ் இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ள இப்படத்தில் இந்தி நடிகர் சல்மான்கானும் இணைந்துள்ளார். படப்பிடிப்புக்கு வந்த அவரைப் பூங்கொத்து கொடுத்து தாம் வரவேற்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிரஞ்சீவி.

 ஐஸ்வர்யா இயக்கி உள்ள காணொளியுடன் கூடிய ஒற்றைப் பாடலை மூன்று முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழில் 'பயணி' என்ற தலைப்பில் ரஜினியும் மலையாளத்தில் 'யாத்ராக்காரன்' என்ற தலைப்பில் மோகன்லாலும் தெலுங்கில் 'சன்சாரி' என்ற தலைப்பில் அல்லு அர்ஜூனும் வெளியிட்டனர்.