சின்னத்திரை மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான கணேஷ்பாபு இயக்கியுள்ள படம் 'கட்டில்'. இதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.
பல தலைமுறைகளைக் கடந்து வரும் கட்டில் பற்றிய கதை இது. ஏற்கெனவே 'யமுனா' என்ற படத்தை இயக்கி உள்ளார் கணேஷ்.
சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ள 'கட்டில்' படத்தின் திரைக்கதையை தமிழ், ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் கணேஷ்பாபு.
இந்நிலையில், வாஷிங்டன் மேரிலாண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இதை சிறந்த நூலாக தேர்வு செய்துள்ளது. அதற்கான விருது அளிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த விருது மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உற்சாகம் கிடைப்பதாகவும் இவர் சொல்கிறார்.

