ஹனிரோஸிற்கு குவியும் பாராட்டுகள்

ஹனிரோஸிற்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
f2e83fed-f230-4d3c-b444-d0f07491c260
-

தமி­ழில் 'சிங்­கம்­புலி' படத்­தில் ஜீவா­வுக்கு ஜோடி­யா­க­வும் தொடர்ந்து 'கந்­தர்­வன்', 'மல்­லுக்­கட்டு' ஆகிய தமிழ்ப் படங்­க­ளி­லும் நடித்­தி­ருந்­தார் மலை­யாள நடிகை ஹனி­ரோஸ். ஆரம்­பத்­தில் மலை­யா­ளத்­தில் சிறிய வேடங்­களில் நடித்­துக் கொண்­டி­ருந்த இவ­ருக்கு ஒரு கட்­டத்­தில் அவர் நடித்த படங்­கள் எல்­லாம் வெற்­றிப் பட­மாக அமைய, மலை­யா­ளத்­தில் முக்­கி­ய­மான நடி­கை­யா­னார் ஹனி­ரோஸ்.

திடீ­ரென அவ­ரது திரை­யு­ல­கப் பய­ணத்­தில் ஒரு சிறிய இடை­வெளி ஏற்­பட்­டா­லும் தற்­போது அதி­ர­டி­யாக மீண்­டும் மறு­பி­ர­வே­சம் செய்­துள்ள ஹனி­ரோஸ். அண்­மை­யில் வெளி­யான பட்­டாம்­பூச்சி படத்­தில் சுந்­தர்.சிக்கு ஜோடி­யாக கதா­நா­ய­கி­யாக நடித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் தற்­போது 'புலி முரு­கன்' படத்­தின் இயக்­கு­நர் வைசாக் இயக்­கத்­தில் மோகன்­லால் நடிப்­பில் வெளி­யா­கி­யுள்ள 'மான்ஸ்­டர்' படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடித்­துள்­ளார் ஹனி­ரோஸ்.

அண்­மை­யில் வெளி­யான இந்­தப் படத்­தில் பல நடி­கை­கள் ஏற்று நடிக்க தயங்­கும் சவா­லான ஓரி­னச்­சேர்க்­கைப் பெண் கதா­பாத்­தி­ரத்­தில் துணிச்­ச­லாக நடித்­துள்­ளார் ஹனி­ரோஸ். அவர் மட்­டு­மல்ல தெலுங்கு நடி­கை­யான லட்­சுமி மஞ்­சு­வும் இதைப்­போன்ற கதா­பாத்­தி­ரத்­தில் ஹனி­ரோ­ஸுக்கு இணை­யாக நடித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் படம் பார்த்த பல­ரும் ஹனி­ரோஸ் நடிப்பை வெகு­வா­கப் பாராட்டி வரு­கி­றார்­கள்.

இந்­தப் படத்­தில் நடித்­தது குறித்து ஹனி­ரோஸ் கூறும்­போது, "இயக்­கு­நர் வைசாக் என் மீது நம்­பிக்கை வைத்து இந்த கதா­பாத்­தி­ரம் கொடுத்­த­தற்­காக அவ­ருக்­குத்­தான் என் முதல் நன்­றி­யைத் தெரி­விக்க வேண்­டும்.

"இது­வரை மோகன்­லா­லு­டன் பல படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் இந்­தப் படத்­தில்­தான் படம் முழு­வ­தும் அவ­ரு­டன் பய­ணிக்­கும் வித­மாக முதன்­மு­றை­யாக நடித்­துள்­ளேன் என்­பது கூடு­தல் மகிழ்ச்சி. இது­போன்ற வித்­தி­யா­ச­மான, நடிப்­புக்கு தீனி போடு­கின்ற சவா­லான கதா­பாத்­தி­ரங்­களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்­ப­டு­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.