ரஜினியின் அடுத்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது உறுதியாகிவிட்டது.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
அவற்றுள் ஒரு படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் கைவண்ணத்தில் உருவாகிறது.
மற்றொன்றை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என கூறப்படுகிறது.
இரு படங்களையுமே லைகா நிறுவனம் தயாரிப்பது என முடிவாகி உள்ளது.
இது தொடர்பாக லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். அதையடுத்து இப்படங்களுக்கு நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் பூசை போடப்படுகிறது.

