மீண்டும் கூட்டணி அமைக்கும் 'ராஜா ராணி' நடிகர்கள்

மீண்டும் கூட்டணி அமைக்கும் 'ராஜா ராணி' நடிகர்கள்

1 mins read
67691db7-3219-4ac0-93a2-834e2ef03bdc
-

நயன்தாராவின் 75வது படத்தை 'நாட் ஸ்டூடியோஸ்', 'ஜீ ஸ்டூடியோஸ் டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 'ராஜா ராணி' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் நடிகை நயன்தாரா.

ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.