பிக் பாஸ் சீசன் 7 முன்னோட்டக் காட்சி தயார்

பிக் பாஸ் சீசன் 7 முன்னோட்டக் காட்சி தயார்

1 mins read
3c7e5524-6bfd-45c0-9bce-99a7d94c0571
கமல்ஹாசன் - ஊடகம்

கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6ல், தொலைக்காட்சி நடிகர் அசீம் வெற்றி பெற்றார். விக்ரமன், ஷிவின், அசீம் மூன்று பேரும் இறுதிப் போட்டியில் இருந்தனர். அதில் விக்ரமன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் அசீம் கோப்பையைத் தட்டிச் சென்றார்.

தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே வழிநடத்த இருக்கிறார். அதற்காக அவருக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் சென்னை EVP பிலிம் சிட்டியில் அவரை வைத்து முன்னோட்டக் காட்சியை தயார் செய்து உள்ளனர். அதனால் விரைவில் முன்னோட்டக் காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப்போல இதில் அறிமுகமாகும் நடிகர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளன. அதன்படி முக்கியமாக விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களான மாகாபா ஆனந்த், KPY சரத், உமா ரியாஸ், பாவானா ஆகியோர் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் மேலும் சில விஜய் தொலைக்காட்சி பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர மற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள், திரையுலகில் இருந்து விலகி இருக்கும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்