ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஜவான் இந்திப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
ஷாருக்கானுடன் பணியாற்றுவதை தவறவிட முடியாத ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் படத்திற்காக சம்பளமே தராமல் இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் நிச்சயம் நடித்திருப்பேன். ஷாருக்கான் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி,” என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

