குறைந்த சம்பளம்: கியாரா அறிவுரை

1 mins read
98325bad-fdba-49f1-a9c4-6f40df74cd51
கியாரா அத்வானி. - படம்: ஊடகம்

திரையுலகில் கதாநாயகர்களைவிட நாயகிகளுக்கு குறைவான சம்பளம் அளிக்கப்படுவது வருத்தம் தருகிறது என்கிறார் நடிகை கியாரா அத்வானி.

நாயகிகள் எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவர்கிறார்கள் என்பதை வைத்தே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, எது குறித்தும் யோசிக்காமல் தங்களது திறமையை மெருகேற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு கொடுக்கிறார்களோ, அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும்,” என்கிறார் கியாரா அத்வானி.

ஊதிய பாகுபாடு என்பது நீண்டகால பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ள அவர், திறமைக்கு மதிப்பு அளிப்பவர்களுடன் இணைந்து செயல்படும்போது இந்தப் பிரச்சினை குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்