தென்னாப்பிரிக்காவில் விஜய்யுடன் மோதும் மோகன்

தென்னாப்பிரிக்காவில் விஜய்யுடன் மோதும் மோகன்

1 mins read
f34feb01-7cf7-4dd5-9f98-03ed39a5da67
மோகன். - படம்: ஊடகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தில் வில்லனாக நடிக்கிறார் மோகன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் மோகனும் அங்கு சென்றுள்ளார்.

பாடல் காட்சிகளுக்குப் பின்னர் விஜய், மோகன் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சியை அங்கு படமாக்க உள்ளனராம்.

ஒரு காலத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மோகன், கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். மீண்டும் நாயகனாக நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், விஜய் படம் என்பதால் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்