அறிவிப்பை வெளியிட்ட ‘இந்தியன் 2’ படக்குழு

அறிவிப்பை வெளியிட்ட ‘இந்தியன் 2’ படக்குழு

1 mins read
70131767-5a1c-4f4b-a8ef-ed042928cc3a
கமல்ஹாசன் - படம்: ஊடகம்.
Google News Preferred Icon

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காணொளியை வெளியிட இருக்கிறது படக்குழு.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே அண்மையில் குரல் பதிவு வேலைகளைத் தொடங்கினார் கமல்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி படத்தின் அறிமுக காணொளி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே நவம்பர் 3ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது கமல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி