மனைவிக்காக படம் இயக்குவதை நிறுத்திய பிரபல இயக்குநர்

1 mins read
e9f31561-b018-4837-9539-bed1881e18fa
இயக்குநர் விக்ரமன் - மனைவி ஜெயப்பிரியா - படம்: ஊடகம்.

வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் விக்ரமன் படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியைக் கவனிக்க படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார்.

‘புது வசந்தம்’ ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னை நினைத்து’, ‘வனத்தைப்போல’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார் இயக்குநர் விக்ரமன். இவர் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தது யாரோ’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா குச்சுப்புடி கலைஞர். மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் கால்களைக்கூட அசைக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அதுபற்றி இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா கூறுகையில், “என்னைக் கவனித்துக்கொள்வதற்காகவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டார். மேலும் சொத்துகளை விற்றுத்தான் மருத்துவ செலவை பார்க்கிறார்,” என்று மிகுந்த வேதனையுடன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்