நூறு திரையரங்குகளில் ‘லியோ’ மறுவெளியீடு

1 mins read
29eb3516-196d-48d1-9c22-5a42b94ac44d
‘லியோ’ விஜய். - படம்: ஊடகம்

விஜய்யின் ‘லியோ’ படத்தை தமிழகத்தில் உள்ள 100 திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியான ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா’ படங்களை அண்மை விடுமுறையின்போதே ஏராளமானோர் பார்த்துவிட்டனர் எனவே, புதுப்படங்கள் வெளியாகும்வரை இவ்விரு படங்களை வைத்துத் தாக்குப்பிடிக்க முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனராம்.

எனவே, ஓடிடி தளத்தில் வெளியாகும் முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘லியோ’ படத்தை வெளியிட அவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்