இயக்குநருக்கு நெருக்கடி தரும் ராம் சரண்

இயக்குநருக்கு நெருக்கடி தரும் ராம் சரண்

1 mins read
be2ce237-9ba6-4589-8641-ae53efab4a88
ராம் சரண் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு ‘இந்தியன் 2’ படத்தினால் தாமதம் ஆவதால் இயக்குநர் சங்கர் மீது ராம் சரண் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான சங்கர், தெலுங்கில் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வருகிறார்.

ஆனால் இயக்குநர் சங்கர் ‘இந்தியன் 2’ படத்தில் மும்முரமாக இருப்பதால் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாவதில் காலதாமதம் ஆகிறது.

அதனால், இயக்குநர் சங்கருக்கு ராம் சரணுக்கும் இடையே பிரச்சினைக் கிளம்பி இருக்கிறது.

ராம் சரணின் 16வது படத்தை புச்சிபாபு சனா இயக்க உள்ளார். அந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விரைந்து முடித்தாக வேண்டும் என தயாரிப்பாளருக்கும் இயக்குநர் சங்கருக்கும் ராம் சரண் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்கிறது டோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்