தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இணைகிறது ஃபஹத் ஃபாசில் - வடிவேலு கூட்டணி

1 mins read
dd629ff8-831c-41de-9c3e-c3119fa6e706
வடிவேலு, ஃபஹத் ஃபாசில். - படம்: ஊடகம்

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் ஃபாசில், வடிவேலு இருவரும் இணைந்து நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்திலும் ஃபஹத் ஃபாசில் ரத்தினவேல் கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். ஃபஹத் ஃபாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் ரசிக்கப்பட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் பாராட்டிப் பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்