தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
ஆண்டுதோறும் தனது திருமணம் தொடர்பான வதந்திகளைக் கேட்டு வருவதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தீவிரமாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்துள்ளார்.
“நான் நிச்சயதார்த்தமோ திருமணமோ செய்துகொள்ளப் போவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறையாவது ஊடகங்கள் எனக்கு திருமணம் செய்து வைக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் இந்த ஊடகங்கள் என்னைக் கையோடு பிடித்துச் சென்று திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் உள்ளன,” என்று விஜய் தேவரகொண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

