ஒரு கோடி ரூபாய் நிதி அளித்த உதயநிதி

ஒரு கோடி ரூபாய் நிதி அளித்த உதயநிதி

படம்: ஊடகம்

16 Feb 2024 - 2:28 pm

1 mins read

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் என்ற முறையில் இந்த நிதியை அவர் அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை வேகப்படுத்த இந்த நிதி உதவும் என அச்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் பங்களிப்பிற்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

குறிப்புச் சொற்கள்