ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நகுல் படம் வெளியீடு

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நகுல் படம் வெளியீடு

படம்: ஊடகம்

18 Feb 2024 - 12:45 pm

1 mins read

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் தற்போது ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியீடு காண உள்ளது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு நகுல் நடித்த ‘செய்’ என்ற படம் வெளியானது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமது நடிப்பில் ஒரு படம் திரைகாண்கிறது என்று சமூக ஊடகங்களில் தனது உற்சாகத்தைப் பகிர்ந்துள்ளார் நகுல்.

ஆர்.ஜே.கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அர்த்தனா வினு நாயகியாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்

தொடர்புடைய செய்திகள்