சாதனை படைத்து வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்

சாதனை படைத்து வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்

1 mins read
0450832e-43da-41cb-8d01-a9d405bf3a15
இயக்குநர் சிதம்பரத்துடன் கமல்ஹாசன். - படம்: இந்திய ஊடகம்

மலையாளத் திரையுலகில் இருந்து வெளிவந்து தென்னிந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்து வரும் திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த Jan.E.Man எனும் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இதுவரை மலையாளத்தில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர் சாதனைகளைப் புரிந்து வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசனை கௌரவப்படுத்தும் விதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர்.

கமலின் ‘குணா’ படத்தில் வரும் பாடலை இப்படத்தில் வைத்து திரையரங்கையே தெறிக்கவிட்டு இருந்தார் இயக்குநர் சிதம்பரம்.

இந்நிலையில் தன்னையும் தன்னுடைய படத்தையும் கௌரவித்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனைச் சந்தித்துவிட்டு, வெளியே வந்த இயக்குநர் சிதம்பரம் ‘இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்’ என நெகிழ்வாகப் பேசினார்.

கமல்ஹாசன் மட்டுமன்றி பிரபல நடிகரும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும் ‘மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கமல்ஹாசன்பாராட்டுதிரைச்செய்தி