31 துறைகளைக் கையாண்டு பெண் இயக்குநர் லாவண்யா உலக சாதனை

31 துறைகளைக் கையாண்டு பெண் இயக்குநர் லாவண்யா உலக சாதனை

1 mins read
38546131-c3e4-4ee8-8e28-ce54f5aad9da
லாவண்யா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்காக, 31 துறைகள் சார்ந்த பணிகளைத் தாமே கையாண்டு சாதனை படைத்துள்ளார் பெண் இயக்குநர் எஸ்.லாவண்யா.

‘பேய் கொட்டு’ என்ற திகில் படத்தை இயக்கியுள்ள இவர், பட இயக்கம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என 24 துறைகள் சார்ந்த பணிகளைத் தனியாகச் செய்துள்ளார். இப்பணிகளை சுயமாகக் கற்றுக்கொண்டாராம்.

மேலும், படத்தின் ‘சப் டைட்டில்’, தணிக்கைத் தொகுப்பு, ஒலிக்கலவை உள்ளிட்ட பணிகளைத் தாமே கவனித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், 31 துறைகள் சார்ந்த பணிகளைச் செய்தது மட்டுமல்ல, கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இச்சாதனைக்காக கின்னஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சாதனைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் லாவண்யா.

இதற்கு முன்பு நடிகர் கணேஷ் பாபு சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி உள்ளார். ‘வெங்காயம்’ படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது ‘தி ஒன்’ என்ற படத்தின் அனைத்துப் பணிகளையும் தாமே செய்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்