எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என்கிறார் நடிகர் விஷால்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அத்தேர்தலில் தாம் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பவில்லை என்றும் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“முதலில் நான் யார் என்பதைக் காட்ட வேண்டும். பிறகு தான் கூட்டணி. அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பிறகு பார்ப்போம்,” என்றார் விஷால்.
விஜய் அரசியலுக்கு வரும் முன்பே, விஷால் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார்.
எனினும் அரசியல் களத்தில் முழு வீச்சில் செயல்படவில்லை.

