தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் செய்தது சரியா எனக் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

1 mins read
0e9eefbe-79f3-4781-b4dc-77c204e53427
வாக்குப் பதிவு செய்யும் விஜய். - படம்: ஊடகம்

நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து வந்தார். ஆனால் அவருடன் படப்பிடிப்பில் இருந்தவர்களை வாக்களிக்க அழைத்து வராதது தற்பொழுது கேள்விக்குறியாகி இருக்கிறது.

‘தி கோட்’ படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே வாக்களிக்கவில்லை. விஜய்க்கு மட்டும் வாக்குப் போட வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் வாக்களிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய், அவர் வாக்களித்தால் மட்டும் போதும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயகக் கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி படக்குழுவினரும் வாக்களிக்க வைத்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு அவர் செய்யவில்லை? அவர் செய்தது சரியா? என்று பலரும் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி