தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவர்ச்சி உடையில் வலம் வரும் நயன்தாரா

1 mins read
86ee4e79-a8a9-4e24-aeb5-9f3a8398ad80
நயன்தாரா. - படம்: ஊடகம்

திடீரென ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடைகள் அணிந்து வலம் வருகிறார் நயன்தாரா.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்றபோது நயன்தாரா அணிந்து வந்த கறுப்பு நிற கவர்ச்சி உடை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில், அதே உடையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘சின்ஸ் 1960’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தித் திரையுலகில் புது வாய்ப்புகளைப் பெறும் நோக்கத்துடன் அவர் கவர்ச்சி உடையில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்