மே மாதம் பிரம்மாண்ட இசை வெளியீடு காண்கிறது ‘இந்தியன் 2’

1 mins read
c4824415-eb89-4a4e-9432-6af53c37e071
கமல்ஹாசன். - படம்: ஊடகம்

‘இந்தியன் 2’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படத்தை இயக்குநர் சங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமல், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நேரடியாகப் பாட உள்ளார். இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி