தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாப்சி: கடுமையான உழைப்பால் கிடைத்தது இந்த வெற்றி

1 mins read
b07e0026-6c2d-41ea-9fe9-f2f34eb7d29a
நடிகை டாப்சி. - படம்: ஊடகம்

திரைத்துறையில் தான் பெற்ற வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை. கடுமையாக உழைத்ததால் கிடைத்தது இந்த வெற்றி என்று கூறியுள்ளார் நடிகை டாப்சி.

டாப்சி அண்மையில் டென்மார்க்கைச் சேர்ந்த பூப்பந்து வீரர் மத்தியாஸ் போவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில் டாப்சி வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறி வந்தது குறித்து பேசும்போது, “நான் தற்போது அடைந்துள்ள வெற்றி எனக்கு அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைக்கவில்லை. மிகவும் கடினமாக உழைத்து தினமும் என்னை நானே உத்வேகப்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளேன்.

“இப்போது நான் இருக்கும் இடத்தை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன்,” என்று கூறியுள்ளார் டாப்சி.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி