தமிழில் நடிக்க கதை கேட்கும் விஜய் தேவரகொண்டா

தமிழில் நடிக்க கதை கேட்கும் விஜய் தேவரகொண்டா

1 mins read
609b3bc5-8d09-4d2b-a6c4-45ef130ade79
விஜய் தேவரகொண்டா. - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடயை அண்மைய படத்தின் தோல்வியால் மனம் ஒடிந்துவிட்டாராம்.

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலர் அப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். கேலி சித்திரங்களும் வெளியாகின.

இதனால் சங்கடத்துக்கு ஆளான விஜய் தேவரகொண்டா, விமர்சகர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இரண்டு மாதம் வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டார்.

இந்நிலையில், அவர் முன்பே நடித்து முடித்த ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படம் வசூல் ரீதியில் ஓரளவு ஆறுதல் தந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் கதை கேட்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, இம்முறை தமிழில் நடிக்கவும் விருப்பம் கொண்டுள்ளாராம்.

குறிப்புச் சொற்கள்